உலக செய்திகள்

டிக் டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியது பாகிஸ்தான்

சீனாவின் நெருங்கிய நட்பு நாடான பாகிஸ்தான், சீனாவிடம் இருந்த அழுத்தம் காரணமாகவே இரு வாரங்களுக்குள் டிக் டாக் மீதான தடையை நீக்கியிருக்கலாம் எனத்தெரிகிறது.

தினத்தந்தி

இஸ்லமபாத்,

உலகின் பல்வேறு பகுதிகளில் 'டிக் டாக்' பயன்படுத்தப்பட்டு வருகிறது. இளம் வயதினர் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள வீடியோ செயலியில், அநாகரிகமான பதிவுகளும் வெளியிடப்படுவதாக அவ்வப்போது குற்றச்சாட்டு எழுவது உண்டு.

அந்த வகையில், டிக் டாக் செயலியில் ஒழுக்க கேடான மற்றும் அநாகரிகமான விடீயோக்கள் வெளியாவதாக கூறி, பாகிஸ்தான் தொலைத்தொடர்பு ஆணையம் அந்த செயலிக்கு கடந்த 9 ஆம் தேதி தடை விதித்தது. மேலும், டிக் டாக் செயலி நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாகவும் பாகிஸ்தான் கூறியிருந்தது.

இந்த நிலையில், டிக் டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் தொலைத்தொடர்பு ஆணையம் கூறுகையில், உரிய நெறிமுறைகளுக்கு உள்பட்டு செயல்படுவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. இதையடுத்து, டிக் டாக் செயலி மீதான தடை நீக்கப்பட்டுள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.

பாதுகாப்பு காரணங்களுக்காக , இந்தியாவில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது நினைவு கொள்ளத்தக்கது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை