உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் சாலையோர குண்டு வெடித்ததில் பயங்கரவாத ஒழிப்பு பிரிவு தலைவர் பலி

ஆப்கானிஸ்தானில் சாலையோர குண்டு வெடித்ததில் பயங்கரவாத ஒழிப்பு பிரிவு தலைவர் கொல்லப்பட்டார்.

காபூல்,

ஆப்கானிஸ்தானில் அரசுக்கு எதிராக செயல்பட்டு வரும் பயங்கரவாத குழுக்கள் திடீரென தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில் ஏதுமறியாத பொதுமக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். அரசுக்கு எதிரான நீண்டகால போர், அமைதி பேச்சுவார்த்தை நடத்தியும் பலனின்றி முடிவுக்கு வராமல் உள்ளது.

அந்நாட்டின் மேற்கு ஹெராத் மாகாணத்தில் ஷின்டன்ட் மாவட்டத்தில் போலீசாரை இலக்காக கொண்டு சாலையோர வெடிகுண்டு ஒன்று இன்று மதியம் வெடிக்க செய்யப்பட்டது.

இந்த சம்பவத்தில் பயங்கரவாத ஒழிப்பு பிரிவு தலைவர் ஒருவர் கொல்லப்பட்டார். இதுதவிர குண்டுவெடிப்பில் 2 போலீசாரும் காயமடைந்துள்ளனர். இதனை ஹெராத் மாகாண காவல் துறை செய்தி தொடர்பு அதிகாரி அப்துல் ஆஹாத் வாலிஜடா தெரிவித்து உள்ளார்.

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு