உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் தற்கொலை வெடிகுண்டு தாக்குதல்; 6 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் உளவு அமைப்பு வளாகம் அருகே இன்று நடந்த தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் பொதுமக்களில் 6 பேர் கொல்லப்பட்டனர்.

காபூல்,

ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் தேசிய பாதுகாப்பு இயக்குநரகத்தின் பயிற்சி மையத்தில் கடந்த வாரம் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த நிலையில், தேசிய பாதுகாப்பு இயக்குநரக அலுவலகத்திற்கு வந்த பணியாளர்கள் மீது இன்று தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலில் 6 பேர் பலியாகினர். 3 பேர் காயமடைந்தனர்.

இதுபற்றி உள்துறை அமைச்சக செய்தி தொடர்பு அதிகாரி நஜீப் டேனிஷ் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, டொயோட்டா செடான் காரில் வந்து கொண்டிருந்த 6 பேரும் தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்டனர். முக்கிய சாலை பகுதியில் இந்த தாக்குதல் நடந்துள்ளது என கூறியுள்ளார்.

தேசிய பாதுகாப்பு இயக்குநரக வளாகத்தின் முக்கிய நுழைவாயில் பகுதிக்கு வெளியே இந்த தாக்குதல் நடந்துள்ளது. இதனை தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT