உலக செய்திகள்

ஜெருசலேமில் பஸ் நிறுத்தத்தில் திடீர் துப்பாக்கி சூடு; 6 பேர் காயம்

துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்திய 2 நபர்கள் சம்பவ பகுதியிலேயே சுட்டு வீழ்த்தப்பட்டனர் என போலீசார் தெரிவித்தனர்.

ஜெருசலேம்,

ஜெருசலேம் நகரின் நுழைவு பகுதியில் இன்று காலை பரபரப்பான நேரத்தில் 2 பேர் ஆயுதங்களுடன் வந்தனர். அவர்கள் பஸ் நிறுத்தத்தில் இருந்தவர்களை நோக்கி திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர்.

இந்த சம்பவத்தில் 6 பேர் காயமடைந்து உள்ளனர். அவர்களில் படுகாயமடைந்த 2 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனை இஸ்ரேல் நாட்டின் மேகன் டேவிட் ஆடம் என்ற ஆம்புலன்ஸ் சேவை அமைப்பு தெரிவித்து உள்ளது.

எனினும், இந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கான காரணம் பற்றி தெரிய வரவில்லை. இதில், தாக்குதல் நடத்திய 2 நபர்கள் சம்பவ பகுதியிலேயே சுட்டு வீழ்த்தப்பட்டனர் என போலீசார் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து அந்த பகுதியில் அதிக எண்ணிக்கையில் ஆம்புலன்சுகள் காணப்பட்டன. போலீசாரும் பாதுகாப்பிற்காக அதிக அளவில் குவிக்கப்பட்டனர். இந்த தாக்குதல் பற்றி தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

SCROLL FOR NEXT