உலக செய்திகள்

பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 4 போலீசார் உயிரிழப்பு

பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 4 போலீசார் உயிரிழந்தனர்.

தினத்தந்தி

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில் ஐ.எஸ். உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் செயல்படுகின்றன. இவை அப்பாவி பொதுமக்கள், ராணுவ வீரர்கள் மீது அடிக்கடி தாக்குதல்களை நடத்துகிறது. பாகிஸ்தானின் கைபர் பக்துங்வா மாகாணம் லக்கி மார்வாட்டில் உள்ள போலீஸ் நிலையம் மீது நேற்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

இதற்கு பதிலடி தாக்குதல் நடத்துவதற்காக பயங்கரவாதிகளை தேடி போலீசார் தங்களது வாகனத்தில் விரட்டி சென்றனர். அப்போது போலீசார் சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் வெடிகுண்டுகளை வீசினர்.

இந்த தாக்குதலில் 4 போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகினர். மேலும் 6 போலீசார் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானில் செயல்படும் தெஹ்ரீக்-இ-தலீபான் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றியதற்கு பிறகு அவர்களுடன் இணைந்து இந்த அமைப்பு பாகிஸ்தானில் பயங்கரவாத சம்பவங்களை அரங்கேற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து