லாகூர்,
பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் நடந்த இரு வெவ்வேறு தாக்குதல்களில் 5 வீரர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். முதலில் ஆப்கானிஸ்தான் எல்லையையொட்டிய பகுதியருகே மமுந்த் மலை பகுதியில் சாலையோரம் வைக்கப்பட்ட வெடிகுண்டு ஒன்று வெடித்துள்ளது.
அந்த பகுதியில், பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருந்தனர். இந்த நிலையில், குண்டுவெடிப்பில் 2 போலீசார் மற்றும் 2 படையினர் என 4 பேர் உயிரிழந்து உள்ளனர். அதற்கு முன், வாகனம் மீது நடந்த மற்றொரு தாக்குதலில் 2 பேர் காயமடைந்து உள்ளனர்.
இதனை தொடர்ந்து, படையினர் அந்த பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலுக்கு எந்தவொரு அமைப்பும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை.