பாரீஸ்
ஜூராஸிக் காலத்தில் வாழ்ந்த 2 டைனோசர்களின் முழு எலும்புக் கூடுகள் பிரான்ஸ் நாட்டில் ஏலம் விடப்பட உள்ளன. 4 மீட்டர் நீளம் கொண்ட கேம்ப்டோசாரஸ் மற்றும் அல்லோசாரஸ் (Camptosaurus and an Allosaurus) வகையைச் சேர்ந்த டைனோசர்களின் எலும்புக் கூடுகள் அமெரிக்காவின் வயோமிங் மாநிலத்தில் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்த எலும்புக்கூடுகள் பாரீஸ் நகரில் அடுத்த வாரம் ஏலம் விடப்பட உள்ளன. அதனை முன்னிட்டு ஏலம் எடுக்க விரும்புபவர்கள் அதனைப் பார்வையிட அனுமதிக்கப்பட்டிருந்தனர். 5 லட்சம் யூரோக்கள் முதல் 8 லட்சம் யூரோக்கள் வரை ஏலம் போகும் என எதிர்பார்ப்பதாக ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.