ஆன்மிகம்

திருப்பதி கோவில் பட்டுடன் காட்சி அளித்த ஆண்டாள்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இருந்து ஆண்டாளுக்கு பட்டுச்சேலை அனுப்பப்பட்டது.

தினத்தந்தி

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டத்தில் புகழ்பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இருந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெற்ற பிரம்மோற்சவ விழாவுக்கு ஆண்டாள் சூடிய மாலை, வஸ்திரம், கிளி ஆகியவை அனுப்பப்பட்டன. கருட சேவையன்று ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையைச்சூடி ஏழுமலையான் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

இதைத்தொடர்ந்து ஏழுமலையான் கோவிலில் இருந்து ஆண்டாளுக்கு பட்டுச்சேலை அனுப்பப்பட்டது. அந்த பட்டு சேலை நேற்று ஊஞ்சல் சேவையின் போது ஆண்டாளுக்கு சாத்தப்பட்டது. இதையடுத்து திருப்பதி பட்டுச்சேலையில் ஆண்டாளும், சிறப்பு அலங்காரத்தில், ரெங்கமன்னாரும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து