ஆன்மிகம்

கார்த்திகை மாத பிறப்பு: திருச்செந்தூரில் மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய அய்யப்ப பக்தர்கள்

திருச்செந்தூர் முருகன் கோவிலில் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.

தினத்தந்தி

தூத்துக்குடி,

கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு, திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஏராளமான அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். திருச்செந்தூர் மட்டுமின்றி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, ஏராளமான பக்தர்கள் வருகை தந்து மாலை அணிந்து கொண்டனர்.

முன்னதாக இன்று திருச்செந்தூர் முருகன் கோவிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை நடைபெற்றது. அதிகாலை 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், அதனை தொடர்ந்து தீபாராதனை நடந்தது. அதிகாலை முதலே கோவிலுக்கு வருகை தந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட வரிசைகளில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து