ஆன்மிகம்

கீழப்பெரும்பள்ளம் நாகநாத சுவாமி கோவிலில் 26-ம் தேதி கேது பெயர்ச்சி விழா

கேது பெயர்ச்சி விழாவை முன்னிட்டு, பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள் எளிதாக தரிசனம் செய்யும் வகையில் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தினத்தந்தி

பூம்புகார் அருகே கீழப்பெரும்பள்ளம் நாகநாத சுவாமி கோவிலில் நவகிரகங்களில் ஒன்றான கேது பகவானுக்கு தனி சன்னதி உள்ளது. இது கேது பரிகார ஸ்தலமாக விளங்குகிறது. இவரை வழிபட்டால் நீதிமன்ற வழக்குகளில் சாதகம், திருமணத்தடைகள் விலகுவது உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் பெறலாம் என்பது ஐதீகம்.

கேது பகவான் ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பின்னோக்கி பெயர்ச்சி ஆகிறார். அவ்வகையில் கேது பகவான் வருகிற 26 ஆம் தேதி (சனிக்கிழமை) மாலை 4:20 மணிக்கு கன்னி ராசியிலிருந்து சிம்ம ராசிக்கு இடம் பெயர்கிறார்.

கேது பெயர்ச்சியை முன்னிட்டு, நாகநாத சுவாமி கோவிலில் காலையிலிருந்து கேது பரிகார மகா யாகம் நடக்கிறது. இதனைத் தொடர்ந்து மகா பூர்ணாஹுதி செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்படுகிறது. பின்னர் பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சரியாக மாலை 4.20 மணிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு பிரசாதங்கள் வழங்கப்படுகின்றன.

கேது பெயர்ச்சி விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் கிராமவாசிகள் செய்து வருகின்றனர். பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள் எளிதாக தரிசனம் செய்யும் வகையில் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த வருட கேது பெயர்ச்சி காரணமாக மேஷம், ரிஷபம், கடகம், சிம்மம், கன்னி, மகரம், கும்பம், தனுசு மற்றும் விருச்சிக ராசிக்காரர்கள் உரிய பரிகாரங்களை மேற்கொள்ள வேண்டும் என ஜோதிட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து