ஆன்மிகம்

ஒலகடம் ராஜராஜேஸ்வரி சொக்கநாச்சியம்மன் கோவிலில் குண்டம் விழா

குண்டம் விழாவையடுத்து பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி மற்றும் ராஜராஜேஸ்வரி சொக்கநாச்சியம்மன் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் உலாவரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தினத்தந்தி

அம்மாபேட்டை அருகே உள்ள ஒலகடத்தில் ராஜராஜேஸ்வரி சொக்கநாச்சியம்மன், மாரியம்மன், அக்கரைபட்டி முனியப்பன் ஆகிய பிரசித்தி பெற்ற கோவில்கள் உள்ளன. இக்கோவில்களின் வருடாந்திர சித்திரைத் திருவிழா கடந்த மாதம் 24-ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 26-ம் தேதி கம்பம் நடுதல் எரிகரும்பு கொண்டு வருதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது

மே 6-ம் தேதி பெருமாள், ஈஸ்வரர் மற்றும் துணை தெய்வங்களை ராஜேஸ்வரி சொக்கநாச்சியம்மன் ஆலயத்திற்கு அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று அக்கினி அபிஷேகம் நடைபெற்றது. அதன் பின்னர் அம்மை அழைத்தல், குண்டம் இறங்கும் நிகழ்ச்சி (தீ மிதித்தல்) நடைபெற்றது. முதலில் கோவில் பூசாரி பூக்களை குண்டத்தில் தூவி 60 அடி நீளமுள்ள குண்டத்தில் இறங்கினார். அதன் பின்னர் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

அதனை அடுத்து பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும், ராஜேஸ்வரி சொக்கநாச்சியம்மன் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் உலாவரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இரவு வாண வேடிக்கைகளுடன் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.

இன்று கம்பம் பிடுங்குதல், மஞ்சள் நீர் உற்சவம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. வரும்13-ம் தேதி மறு பூஜையுடன் விழா நிறைவுபெறுகிறது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை