ஆன்மிகம்

ஈஷாவில் மகா சிவராத்திரி விழா: நள்ளிரவில் மஹாமந்திர தீட்சை வழங்குகிறார் சத்குரு

மகா சிவராத்திரி விழாவின் முன்னோட்டமாக புகழ்பெற்ற கலைஞர்களின் இந்திய பாரம்பரிய இசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகளின் திருவிழா நடைபெற உள்ளது.

தினத்தந்தி

கோவை ஈஷா யோக மையத்தில் வரும் 26-ம் தேதி மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை மகா சிவராத்திரி விழா நடைபெறுகிறது. சத்குரு வழங்கும் தியானங்கள் மற்றும் பிரபல கலைஞர்களின் இன்னிசை நிகழ்ச்சிகள், பாரம்பரிய கலை மற்றும் தற்காப்பு கலை நிகழ்ச்சிகள், ஆதியோகி திவ்ய தரிசனம் என இரவு முழுவதும் கோலாகலமாக விழா கொண்டாடப்படுகிறது.

முதன்முறையாக, சக்திவாய்ந்த மஹாமந்திர தீட்சையை சத்குரு நள்ளிரவில் அனைவருக்கும் வழங்கவிருக்கிறார். தீட்சை பெற்றபின் தினமும் வீட்டில் மந்திரத்தை உச்சாடனம் செய்து, மகத்தான பலன்களை பெற முடியும். அத்துடன், சத்குருவின் வழிகாட்டும் தீவிரமிக்க தியானங்களும், அருளுருரைகளும் ஓர் ஆழமான ஆன்மிக அனுபவத்தை உணர்வதற்கான சிறந்த சூழலை உருவாக்குகிறது என்றும் ஈஷா யோக மையம் கூறி உள்ளது.

மகா சிவராத்திரி விழாவின் முன்னோட்டமாக புகழ்பெற்ற கலைஞர்களின் இந்திய பாரம்பரிய இசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகளின் திருவிழா நடைபெற உள்ளது. இந்த திருவிழா 23-ம் தேதி தொடங்கி 25-ம் தேதி வரை நடைபெற உள்ளது. 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து