ஆன்மிகம்

மயிலப்பபுரம் ராமர் கோவில் திருவிழா- ஆஞ்சநேயர் வாகனத்தில் ராமர் பவனி

சப்பர பவனியானது மலையான்குளம், மேலத்தெரு உள்ளிட்ட பகுதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தது.

தினத்தந்தி

தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பாப்பான்குளம் பஞ்சாயத்து மயிலப்பபுரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ ராமர் கோவிலில் ஆவணி திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி நேற்று மாலையில் பாப்பான்குளம் இரட்டை ஆத்து முக்கிலிருந்து பால்குடம் எடுத்து வரும் நிகழ்ச்சியும் இரவில் பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து மயிலப்பபுரம் சிறுவர் சிறுமிகளின் கலை நிகழ்ச்சிகளும் இரவில் ஸ்ரீராமருக்கு சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டது. இன்று அதிகாலையில் ஆஞ்சநேயர் வாகனத்தில் ஸ்ரீ ராமர் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த சப்பர பவனியானது மலையான்குளம், மேலத்தெரு உள்ளிட்ட பகுதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தது. திருவிழாவில் மயிலப்பபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு ஸ்ரீராமரை வழிபட்டனர்.

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா