ஆன்மிகம்

வைகாசி மாத அமாவாசை: அருணாசலேஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்

பவுர்ணமி, அமாவாசை, சிவராத்திரி உள்ளிட்ட நாட்களில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெறும்.

தினத்தந்தி

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். இக்கோவிலில் பவுர்ணமி, அமாவாசை, சிவராத்திரி உள்ளிட்ட நாட்களில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெறும்.

இதில் வைகாசி மாதத்தில் வரும் அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த நிலையில் நேற்று வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு கோவிலில் உற்சவ மூர்த்தியான பெரியநாயகருக்கு பால், தேன், பஞ்சாமிர்தம், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் மகா அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பல்வேறு வண்ண மலர்களாலும் அபிஷேகம் நடைபெற்றது. மாலையில் பெரிய நாயகருக்கு பல்வேறு வண்ண மலர் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து