ஆன்மிகம்

புரட்டாசி கடைசி சனிக்கிழமை: பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு

புரட்டாசி மாதத்தின் கடைசி சனிக்கிழமையில் பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

தினத்தந்தி

சென்னை,

பக்தர்கள் புரட்டாசி மாதம் முழுவதும் விரதம் இருந்து பெருமாளுக்கு வழிபாடு செய்வார்கள். குறிப்பாக சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்வார்கள். இந்த ஆண்டு புரட்டாசி மாதத்தின் கடைசி சனிக்கிழமையான நேற்று பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், தேவராஜ முதலி தெரு சென்ன கேசவ பெருமாள் கோவில், புரசைவாக்கம் சீனிவாச பெருமாள் கோவில், விருகம்பாக்கம் சுந்தர வரதராஜ பெருமாள், நங்கநல்லூர் ஸ்ரீ லட்சுமி ஹயவர்தன பெருமாள், பள்ளிக்கரணை லட்சுமி நாராயண பெருமாள், நெற்குன்றம் கரிவரதராஜ பெருமாள் கோவில் உள்பட அனைத்து பெருமாள் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.

அதிகாலையிலேயே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தார்கள். இதே போல தி.நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தான பெருமாள் கோவிலில் காலையில் இருந்து பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு திருப்பதி தேவஸ்தான கோவில் நிர்வாகத்தினர் சிரமமின்றி சாமி தரிசனம் செய்ய விரிவான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.வீடுகளிலும் பெருமாளுக்கு புளியோதரை, மிளகு சாதம், எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம், தயிர் சாதம் உள்பட 5 வகையான சாதங்களை தயார் செய்து சாமிக்கு படையல் வைத்து வழிபட்டார்கள். 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து