ஆன்மிகம்

புரட்டாசி 2-வது சனிக்கிழமை: திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் சிறப்பு பூஜை

புரட்டாசி 2-வது சனிக்கிழமையான இன்று அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முடி காணிக்கை செலுத்தினர்.

தினத்தந்தி

கடலூர் அடுத்த திருவந்திபுரம் தேவநாத சாமி கோவில் 108 வைணவ தலங்களில் முதன்மை பெற்றதாகும். இக்கோவிலில் புரட்டாசி மாதம் முழுவதும் தினந்தோறும் பெருமாள் மற்றும் தாயாருக்கு சிறப்பு பூஜை மற்றும் தேசிகருக்கு சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது.

அவ்வகையில் புரட்டாசி மாதம் 2-வது சனிக்கிழமையான இன்று அதிகாலை 3 மணி அளவில் விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது. பின்னர் பெருமாள் மற்றும் தாயாருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அதிகாலை 5 மணி அளவில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்த வேண்டி சாலக்கரை இலுப்பை தோப்பில் முடி காணிக்கை செலுத்தும் கூடாரத்தில் திரண்டு முடி காணிக்கை செலுத்தினர். பின்னர் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து