ஆன்மிகம்

மீனாட்சி அம்மன் கோவிலில் தை தெப்பத்திருவிழா 31-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தை தெப்பத்திருவிழா வருகிற 31-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

தினத்தந்தி

மதுரை,

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் சித்திரை, ஆடி, ஆவணி, ஐப்பசி, தை, மாசி திருவிழாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. இந்நிலையில் மீனாட்சி அம்மன் கோவிலில் தை மாத தெப்பத்திருவிழா வருகிற 31-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி அடுத்த மாதம் 11-ந் தேதி வரை நடக்கிறது.

31-ந் தேதி காலை சுவாமி சன்னதியில் உள்ள கொடிமரத்தில் திருவிழாவிற்கான கொடி ஏற்றப்படும். அப்போது சுந்தரேசுவரர், மீனாட்சி அம்மன் எழுந்தருளி காட்சி அளிப்பார்கள். தொடர்ந்து சுவாமி 2-ம் பிரகாரத்தில் மீனாட்சி, சுந்தரேசுவரர் வலம் வருவார்கள். மேலும் திருவிழா நடைபெறும் நாட்களில் காலை, இரவு சுவாமியும், அம்மனும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பர்.

விழாவில் அடுத்த மாதம் 5-ந் தேதி சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலையும், 7-ந் தேதி வலை வீசி அருளிய லீலையும் நடைபெறுகிறது. 9-ந் தேதி தெப்பத்திருவிழாவிற்கு முன்னோட்டமாக தெப்பம் முட்டுத்தள்ளுதல் நிகழ்ச்சியும், 10-ந் தேதி சிந்தாமணியில் கதிரறுப்பு திருவிழாவும் நடைபெறுகிறது.

மேலும் சிகர நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் காமராஜர் சாலையில் உள்ள தெப்பக்குளத்தில் 11-ந் தேதி நடக்கிறது. அன்றைய தினம் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் அதிகாலை மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து புறப்பாடாகி தெப்பக்குளத்தை சென்றடைவர். அங்கு அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமியும், அம்மனும் காலையில் எழுந்தருளி தெப்பத்திருவிழா நடைபெறுகிறது. காலை 2 முறையும், இரவு ஒரு முறையும் சுவாமி தெப்பத்தை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பர். இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுவினரும், கோவில் நிர்வாகமும் செய்து வருகிறது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து