ஆன்மிகம்

திருச்செந்தூர் கோவிலில் செப்டம்பர் 4-ந்தேதி முதல் மீண்டும் தங்கத்தேர் வீதி உலா

திருச்செந்தூர் முருகன் கோவிலில் நாள்தோறும் மாலை 6 மணியளவில் கிரிப்பிரகாரத்தில் தங்கத்தேர் உலா நடைபெறுவது வழக்கம்.

தினத்தந்தி

திருச்செந்தூர்,

திருச்செந்தூர் முருகன் கோவிலில் செப்டம்பர் 4-ந்தேதி (நாளை மறுநாள்) முதல் மீண்டும் தங்கத்தேர் வீதி உலா வர இருக்கிறது. இது தொடர்பாக, கோவில் இணை ஆணையர் சு.ஞானசேகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருச்செந்தூர் முருகன் கோவிலில் நாள்தேறும் மாலை 6 மணியளவில் கிரிப்பிரகாரத்தில் தங்கத்தேர் உலா நடைபெறுவது வழக்கம்.

இந்த நிலையில், கோவிலில் பெருந்திட்ட வளாக பணிகளின் ஒரு பகுதியாக தரைத்தள பணிகள் நடைபெற்று வந்தன. இதற்காக கடந்த 17-7-2024 முதல் தற்காலிகமாக தங்கத்தேர் உலா நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது, கிரிப்பிரகார தரைத்தள பணிகள் நிறைவு பெற்றுள்ளதையடுத்து, வருகிற 4-ந்தேதி (வியாழக்கிழமை) முதல் மீண்டும் தங்கத்தேர் உலா நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து