ஆன்மிகம்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதருக்கு பட்டு வஸ்திரம் சமர்ப்பித்த திருப்பதி தேவஸ்தான அதிகாரி

திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கார்த்திகை மாத ஏகாதசி அன்று ரெங்கநாதர் கோவிலுக்கு பட்டு வஸ்திரம் சமர்ப்பிப்பது வழக்கம்.

தினத்தந்தி

2008-ம் ஆண்டு முதல் நாடு முழுவதும் உள்ள சில புராதன மற்றும் முக்கியமான கோவில்களுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் பட்டு வஸ்திரங்களை சமாப்பித்து வருகிறது. அதன்படி திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதருக்கு நேற்று பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்கப்பட்டது.

திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி சியாமளா ராவ், மூலவர் ரெங்கநாதருக்கு பட்டு வஸ்திரத்தைச் சமர்ப்பித்து சாமி தரிசனம் செய்தார், கோவில் வளாகத்தில் அமைந்துள்ள பிற துணைக் கோவில்களிலும் சாமி தரிசனம் செய்தார்.

இந்நிகழ்வில் திருமலை திருப்பதி தேவஸ்தான துணை செயல் அதிகாரி லோகநாதன் மற்றும் தேவஸ்தான ஊழியர்கள், ஸ்ரீரங்கம் கோவில் அதிகாரிகள் பங்கேற்றனர்.

வழக்கமாக ஸ்ரீரங்கம் கோவில் அதிகாரிகள் ஒவ்வொரு ஆண்டும் ஆனிவார ஆஸ்தானத்தின்போது திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பட்டு வஸ்திரங்களை சமர்ப்பிப்பர். திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் கார்த்திகை மாத ஏகாதசி அன்று ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு பட்டு வஸ்திரங்களை சமர்ப்பிப்பது வழக்கம். 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து