சினிமா துளிகள்

விஜய் பாடலுக்கு நடனமாடிய ராஷ்மிகா மந்தனா

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா விஜய் பாடலுக்கு நடனமாடி பதிவிட்டுள்ளார்.

தினத்தந்தி

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துவிட்ட நிலையில் படத்தின் புதிய அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியாகின்றன. இப்படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

சமீபத்தில் பீஸ்ட் படத்தில் இடம்பெற்றுள்ள அரபிக் குத்து பாடலை படக்குழு வெளியிட்டிருந்தது. அனிருத் இசையில் சிவகார்த்திகேயன் எழுதியுள்ள இப்பாடல் பல சாதனைகளை படைத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இப்பாடலில் பலரையும் கவர்ந்த விஜய்யின் நடனம் அனைவரையும் நடனமாட வைத்துள்ளது. தற்போது அரபிக் குத்து பாடலுக்கு நடிகை ராஷ்மிகா மந்தனா நடனமாடிய வீடியோவை அவருடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து