நாடாளுமன்ற தேர்தல்-2024

நாடாளுமன்ற தேர்தலில் அரசியல் கட்சிக்கு ஆதரவா? - நடிகர் அமீர்கான் விளக்கம்

நடிகர் அமீர்கான் குறிப்பிட்ட அரசியல் கட்சியை ஆதரித்து ஓட்டு கேட்பது போன்ற வீடியோ ஒன்று வலைத்தளத்தில் வெளியாகியது.

தினத்தந்தி

மும்பை,

நாடாளுமன்ற தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு நாளை (19-ந்தேதி) நடைபெறும் நிலையில், இந்தி நடிகர் அமீர்கான் குறிப்பிட்ட அரசியல் கட்சியை ஆதரித்து ஓட்டு கேட்பது போன்ற வீடியோ ஒன்று வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோ போலியானது என்று அமீர்கான் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது. வீடியோவுக்கு எதிராக போலீசிலும் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து அமீர்கான் விளக்கம் அளித்து வெளியிட்ட அறிக்கையில், "அமீர்கான் தனது வாழ்க்கையில் இதுவரை எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவு தெரிவித்தது இல்லை. தேர்தல் மற்றும் வாக்களிப்பதன் அவசியம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த கடந்த காலங்களில் தேர்தல் கமிஷனுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறார்.

தற்போது அமீர்கான் குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவு தெரிவித்து இருப்பதாக வெளியாகி உள்ள வீடியோ போலியானது. இதுகுறித்து மும்பை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்து இருக்கிறோம். வருகிற தேர்தலில் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்று அமீர்கான் தெரிவித்து உள்ளார்'' என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை