கிரிக்கெட்

இலங்கைக்கு எதிரான 3-வது டி-20 கிரிக்கெட் - இந்திய அணி முதல் பேட்டிங்

இலங்கை அணிக்கு எதிரான 3-வது டி-20 கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

தினத்தந்தி

கொழும்பு,

ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் ஆட்டத்தில் இந்திய அணியும், 2-வது ஆட்டத்தில் இலங்கை அணியும் வெற்றி பெற்றன. இதையடுத்து தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஷிகர் தவான் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து இந்திய அணி தற்போது முதலாவதாக பேட்டிங் செய்து வருகிறது. இலங்கை அணியில் உதனாவிற்கு பதிலாக பாத்தும் நிசாங்கா அணியில் இடம்பெற்றுள்ளார். இந்திய அணியில் நவ்தீப் சயினிக்கு பதிலாக சந்தீப் வாரியர் அணியில் சேக்கப்பட்டுள்ளார்.

இன்றைய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களின் பட்டியல்;-

இந்திய அணி - தவான் (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன், நிதிஷ் ராணா, புவனேஷ்வர்குமார், குல்தீப் யாதவ், ராகுல் சாஹர், சந்தீப் வாரியர், சேத்தன் சகாரியா, வருண் சக்கரவர்த்தி.

இலங்கை அணி - அவிஷ்கா பெர்னாண்டோ, மினோட் பானுகா, தனஞ்ஜெயா டி சில்வா, சமரவிக்ரமா, ரமேஷ் மெண்டிஸ், ஷனகா, (கேப்டன்), ஹசரங்கா, சமிகா கருணாரத்னே, பாத்தும் நிசாங்கா, அகிலா தனஞ்ஜெயா, துஷ்மந்தா சமீரா.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து