புதுடெல்லி
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தென்ஆப்பிரிக்க பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேப் டவுனில் நடைபெற்று வருகிறது .ஆட்டத்தின் 3-வது நாளான நேற்று தென்ஆப்பிரிக்கா அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தது. அந்நேரம் ஆஸ்திரேலியாவின் தொடக்க பந்து வீச்சாளர் பேன்கிராஃப்ட் மர்மமான ஒரு பொருளைக்கொண்டு பந்தினை சேதப்படுத்தும் காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் உலகளவில் பூதாகரமானது பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்தியதால் அணித் தலைவர் ஸ்மித்துக்கு நெருக்கடி ஏற்பட்டது. இந்நிலையில் சுமித்தை ஆஸ்திரேலியா அணியில் தலைவர் பதவில் இருந்து நீக்க பரிந்துரை செய்தது . டேவிட் வார்னரும் துணைத் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.சுமித்துக்கு பதிலாக ஆஸ்திரேலியா அணியிம் பொறுப்பு தலைவராக விக்கெட் கீப்பர் டிம் பெய்ன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். டுவிட்டரில் இதுதொடர்பாக பதிவிட்டுள்ள அவர் ஐசிசியின் நடவடிக்கை சிறப்பாக உள்ளது. உங்களுக்கு ஒரு நியாயம், எங்களுக்கு ஒரு நியாயமா? பேன்கிராஃப்ட்க்கு தடை விதிக்காதது ஏன்? கடந்த 2001 ஆம் ஆண்டு இதுபோன்ற விவகாரத்தில் இந்திய வீரர்கள் 6 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. 2008 சிட்னி விவகாரத்திலும் 3 போட்டிகளில் தடை விதிக்கப்பட்டது எனப் பொங்கியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி கங்குலி தலைமையில் கடந்த 2001ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. போர்ட் எலிசபெத்தில் நடைப்பெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் பந்தை சேதப்படுத்தியதாக புகார் கூறப்பட்டது. இதன் காரணமாக இந்திய வீரர்கள் 6 பேருக்கு தண்டனை வழங்கப்பட்டது. சச்சின் டெண்டுல்கர், ஷேவாக்குக்கு ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட தடையும், போட்டி கட்டணத்தில் 75 சதவீதம் அபராதமும் விதிக்கப்பட்டது. அணியை வழிநடத்திச் சென்ற கங்குலிக்கு ஒரு டெஸ்ட் போட்டி, இரண்டு ஒரு நாள் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டது. அதேபோல் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங், துவக்க ஆட்டக்காரர் ஷிவ் சுந்தர் தாஸ், விக்கெட் கீப்பர் தீப்தாஸ் குப்தாவுக்கு ஆகியோரும் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட தடைவிதிக்கப்பட்டது.