கிரிக்கெட்

கிரிக்கெட் விளையாடும் போது காயம் அடைந்த வீரர் சிகிச்சை பலனின்றி மரணம்

ஐதாராபாத்தில் கிரிக்கெட் விளையாடும் போது காயம் அடைந்த வீரர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.

ஐதாராபாத்,

ஐதாராபத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மிர் ஆலம் இத்கா என்ற உள்ளூர் மைதானத்தில் இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடிக்கொண்டு இருந்துள்ளனர். ஒரே மைதானத்தில் பல குழுக்களாக பலர் இளைஞர்கள் விளையாடியதாக கூறப்படுகிறது. அப்போது வாஜித் என்ற இளைஞர் கிரிக்கெட் விளையாடுகையில் கேட்ச் பிடிக்க ஓடிச்சென்றிருக்கிறார்.

அப்போது மைதானத்தில் விளையாடிய மற்றொரு அணியின் வீரர் மட்டையைச் சுழற்ற இவரது நெற்றியில் காயம் பட்டுள்ளது, இதில் நிலைகுலைந்த அந்த இளைஞர் அப்படியே மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து மருத்துவமனைக்கு உடனடியாக சக இளைஞர்கள் எடுத்துச் சென்றனர், அங்கு அவரைக் காப்பாற்ற முடியவில்லை. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பஹத்புரா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு