கிரிக்கெட்

ஐ.பி.எல். 2024; தேங்காய் உடைத்து பூஜையுடன் மும்பை அணியில் இணைந்த ஹர்திக் பாண்ட்யா - வீடியோ

சென்னையில் நடைபெற உள்ள தொடக்க லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோத உள்ளன.

தினத்தந்தி

மும்பை,

சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்ளும் 17வது ஐ.பி.எல் சீசன் வரும் 22ம் தேதி சென்னையில் தொடங்குகிறது. சென்னையில் நடைபெற உள்ள தொடக்க லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோத உள்ளன.

ஐ.பி.எல் தொடர் தொடங்க இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் அனைத்து அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக அந்தந்த அணிகள் சார்பில் சமூக வலைதள பதிவுகள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றன.

அந்த வரிசையில், மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் வீடியோ வெளியிடப்பட்டு இருக்கிறது. 2024 ஐ.பி.எல். தொடரில் மும்பை அணி கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா களமிறங்க உள்ளார். இந்த நிலையில், ஐ.பி.எல். தொடரில் மீண்டும் மும்பை அணிக்கு திரும்பியுள்ள ஹர்திக் பாண்ட்யா டிரெசிங் ரூமில் தேங்காய் உடைத்து, பூஜை செய்துள்ளார்.

இது தொடர்பான வீடியோவை மும்பை இந்தியன்ஸ் அணி தனது அதிகாரபூர்வ எக்ஸ் வலைதளப்பக்கத்தில் வெளியிட்டு உள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை