கிரிக்கெட்

ரோகித் சர்மா குறித்து மனம் திறந்த பார்த்தீவ் படேல்

ஐ.பி.எல். தொடர் நெருங்கி வரும் வேளையில் பல முன்னாள் வீரர்கள் தங்களது நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர்.

தினத்தந்தி

rமும்பை,

இந்தியாவில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரானது இதுவரை 16 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இதன் 17-வது சீசன் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தொடரில் 10 அணிகள் கலந்து கொள்ள உள்ளன.

இதுவரை நடந்து முடிந்துள்ள ஐ.பி.எல் தொடர்களில் அதிகபட்சமாக சென்னை மற்றும் மும்பை அணிகள் தலா 5 முறை கோப்பைகளை வென்றுள்ளன. அதன்படி, நடப்பு ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் வரும் 22ம் தேதி ஆரம்பமாகிறது. முதல் போட்டியில் சென்னை-பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. சென்னையில் இந்த போட்டியானது இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது.

ஐ.பி.எல். தொடர் நெருங்கி வரும் வேளையில் பல முன்னாள் வீரர்கள் தங்களது நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் இந்தியா மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் வீரரான பார்த்தீவ் படேல், ரோகித் சர்மா குறித்த தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

'2015 ஐ.பி.எல். தொடரில் பும்ரா மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடியபோது, சரியாக செயல்படவில்லை என்பதால் அவரை அடுத்த சீசனில் எடுக்க வேண்டாம் என்ற முடிவுடன் நிர்வாகம் இருந்தது. ஆனால் ரோகித் சர்மாதான் பும்ராவின் மீது நம்பிக்கை வைத்து அணியில் வைத்துக்கொண்டார். அதற்கான பலனை அடுத்த சீசனில் நாங்கள் கண்டோம்' என்று கூறினார். 

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்