கிரிக்கெட்

ரஞ்சி கிரிக்கெட்: மத்தியபிரதேசத்துக்கு எதிராக ஆந்திர அணி முதல் இன்னிங்சில் 379 ரன்னில் ஆல்-அவுட்

முதல் இன்னிங்சை ஆடிய மத்தியபிரதேச அணி நேற்றைய ஆட்டம் முடிவில் 4 விக்கெட்டுக்கு 144 ரன்கள் எடுத்தது.

இந்தூர்,

இந்தூரில் நடைபெறும் நடப்பு சாம்பியன் மத்தியபிரதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஆந்திரா முதல் நாளில் 2 விக்கெட்டுக்கு 262 ரன்கள் எடுத்து இருந்தது. ரிக்கி புய் 115 ரன்னுடனும், கரண் ஷிண்டே 83 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

2-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய கரண் ஷிண்டே 110 ரன்னிலும், ரிக்கி புய் 149 ரன்னிலும் கேட்ச் ஆனார்கள். அதன் பிறகு வந்தவர்கள் தாக்குப்பிடிக்கவில்லை.

இதனையடுத்து ஆந்திர அணி முதல் இன்னிங்சில் 379 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய மத்தியபிரதேச அணி நேற்றைய ஆட்டம் முடிவில் 4 விக்கெட்டுக்கு 144 ரன்கள் எடுத்தது. இன்று 3-வது நாள் ஆட்டம் நடக்கிறது.

பெண் விமானிகள் குறித்து அஜித் பவார் வெளியிட்ட பழைய பதிவு வைரல்

இனி சில்லறை பிரச்சினை வராது.. ஏடிஎம்களில் விரைவில் 10, 50 ரூபாய் நோட்டுகள்?

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இபிஎப்ஓ சம்பள உச்சவரம்பு ரூ.25,000 ஆக உயர்கிறதா?

பெண்களுடன் தனிமையில் இருந்து வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்ட கல்லூரி மாணவர் கைது