Image Courtesy: @ICC / @BLACKCAPS 
கிரிக்கெட்

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டி20 தொடர்: நியூசிலாந்து அணி அறிவிப்பு

இந்த அணிக்கு மிட்செல் சாண்ட்னெர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தினத்தந்தி

வெல்லிங்டன்,

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20, 3 ஒருநாள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இதில் முதலில் டி20 போட்டிகளும், அதனை தொடர்ந்து ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளும் நடக்கின்றன. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டி20 போட்டி வரும் 5ம் தேதி நடக்கிறது.

இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டி20 தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு மிட்செல் சாண்ட்னெர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

நியூசிலாந்து டி20 அணி விவரம்: மிட்செல் சாண்ட்னெர் (கேப்டன்), மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாம்ப்மென், டெவான் கான்வே, ஜேக்கப் டபி, ஜேக் போல்க்ஸ், கைல் ஜேமிசன், டேரில் மிட்செல், ஜிம்மி நீஷம், ரச்சின் ரவீந்திரா, டிம் ராபின்சன், டிம் செய்பர்ட் (விக்கெட் கீப்பர்), நாதன் ஸ்மித், இஷ் சோதி. 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து