கிரிக்கெட்

டி20 உலக கோப்பை அரையிறுதி போட்டி; ஆப்கானிஸ்தான் 27/5 (5 ஓவர்கள்)

டி20 உலக கோப்பை அரையிறுதி போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது.

தினத்தந்தி

தரவுபா,

ஆப்கானிஸ்தான் மற்றும் தென்ஆப்பிரிக்கா இடையேயான முதல் டி20 உலக கோப்பை அரையிறுதி போட்டி இன்று தரவுபா நகரில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது.

அந்த அணி 5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்து உள்ளது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான குர்பாஸ் (0), இப்ராகிம் ஜத்ரான் (2) ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து விளையாடிய நயீப் (9), முகமது நபி (0) மற்றும் கரோட் (2) ரன்களில் ஆட்டமிழந்தனர்.

5 ஓவர்கள் முடிவில் 27 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்து ஆப்கானிஸ்தான் அணி தோல்வியை தழுவும் வகையில் விளையாடி வருகிறது. தென்ஆப்பிரிக்க அணி விக்கெட்டுகளை கைப்பற்றி வெற்றி பெறும் முனைப்பில் அதிரடியாக விளையாடி வருகிறது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து