Image Courtacy: EmiratesCricketTwitter  
கிரிக்கெட்

ஐ.சி.சி-யின் ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை வென்ற யு.ஏ.இ கேப்டன்

ஐ.சி.சி-யின் ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீராங்கனை விருது வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹேலி மேத்யூஸ்-க்கு வழங்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

துபாய்,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. அதன்படி ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளை ஐ.சி.சி அறிவித்திருந்தது.

அதன்படி ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதிற்கான பரிந்துரை பெயர் பட்டியலில் நமீபிய வீரரான எராஸ்மஸ், யு.ஏ.இ கேப்டனாக முகமது வாசிம் மற்றும் பாகிஸ்தான் முன்னாள் கேப்டனான ஷாகீன் அப்ரிடி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

அதேபோல் ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீராங்கனை விருதிற்கான பரிந்துரை பெயர் பட்டியலில் தென் ஆப்பிரிக்க வீராங்கனையான லாரா வோல்வார்ட், வெஸ்ட் இண்டீஸ் கேப்டனான ஹேலி மேத்யூஸ் மற்றும் இலங்கை அணியின் கேப்டனான சமாரி அதபத்து ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

இந்நிலையில் ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீரர் - வீராங்கனை விருது வென்றவர்களை ஐ.சி.சி அறிவித்துள்ளது. அதன்படி ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீரர் விருது யு.ஏ.இ கேப்டன் முகமது வாசிமுக்கும், சிறந்த வீராங்கனை விருது வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹேலி மேத்யூஸ்-க்கும் வழங்கப்பட்டுள்ளது.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்