image courtesy:PTI 
கிரிக்கெட்

முத்தரப்பு டி20 தொடர்: முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிய பாகிஸ்தான்

இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தான் - ஜிம்பாப்வே அணிகள் மோதின.

தினத்தந்தி

ராவல்பிண்டி,

பாகிஸ்தான், இலங்கை மற்றும் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிகள் இடையிலான முத்தரப்பு டி20 தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தான்- ஜிம்பாப்வே அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 5 விக்கெட்டுக்கு 195 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சகிப்சதா பர்ஹான் (63 ரன்), பாபர் அசாம் (74 ரன்) அரைசதம் அடித்தனர்.

பின்னர் 196 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய ஜிம்பாப்வே 19 ஓவர்களில் 126 ரன்னில் சுருண்டது. இதனால் பாகிஸ்தான் 69 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த தொடரில் பாகிஸ்தான் பெற்ற 3-வது வெற்றி இதுவாகும். இதன் மூலம் பாகிஸ்தான் முதல் அணியாக இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியது.

ஜிம்பாப்வே தரப்பில் அதிகபட்சமாக ரியான் பர்ல் 67 ரன்கள் அடித்தார். பாகிஸ்தான் தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் உஸ்மான் தாரிக் ஹாட்ரிக் உள்பட 4 விக்கெட் வீழ்த்தினார். அவரே ஆட்ட நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார். 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து