Image Courtesy : Twitter Real Madrid C.F. 
கால்பந்து

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து : ரியல் மாட்ரிட் அணி 14-வது முறையாக சாம்பியன்..!

ரியல் மாட்ரிட் அணி சாம்பியன் பட்டம் வென்றது

பாரிஸ்,

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் இன்று நடைபெற்ற இறுதி போட்டியில் லிவர்புல்  -ரியல் மாட்ரிட்  அணிகள் மோதின.இரு அணிகளும் சமபலம் வாய்ந்த அணிகள் என்பதால் இந்த போட்டிக்கு ரசிகர்கள் மத்தயில் பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

ஆட்டம் தொடங்கியது முதலே இரு அணி வீரர்களும் கோல் அடிக்க தீவிரம் காட்டினர் .இரு அணி வீரர்களும் முதல்பாதியில் போராடியும் கோல் அடிக்க முடியவில்லை .இதனால் ஆட்டத்தின் முதல் பாதி 0-0 என்ற கணக்கில் இருந்தது .

இதனை தொடர்ந்து தொடங்கிய  2வது பாதியில் ஆட்டத்தின் 59 வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் அணியின் வினி ஜேஆர் ஒரு கோல் அடித்தார் .இதனால் ரியல் மாட்ரிட் அணி 1-0 என முன்னிலை பெற்றது .

இதற்கு பதிலடி கொடுக்க எதிரணி வீரர்கள் கடைசி வரை போராடியும் பலனில்லை .இதனால் ரியல் மாட்ரிட் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் சாம்பியன் பட்டம் வென்றது .இது அந்த அணி வெல்லும் 14-வது ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் பட்டம் ஆகும் .

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு