Image : AFP  
கால்பந்து

கூகுளில் அதிகம் தேடப்பட்ட விளையாட்டு அணிகள் பட்டியல் : மெஸ்சியின் இன்டர் மியாமி அணிக்கு முதலிடம்..!

2023ம் ஆண்டில் உலகளவில் அதிகம் தேடப்பட்ட விளையாட்டு அணிகள் பட்டியலை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

தினத்தந்தி

வாஷிங்டன்,

இணையத்தில் தகவல்களை தேடுவோருக்கு சர்ச் என்ஜின் எனப்படும் தேடுபொறி மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இந்த வசதியை பல மென்பொருள் நிறுவனங்கள் வழங்கினாலும், ஆல்பாபெட் நிறுவனத்தின் கூகுள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகிறது.ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் உலகளவில் அதிகம் தேடப்பட்ட விளையாட்டு அணிகள் பட்டியலை கூகுள் நிறுவனம் வெளியிட்டு வருகிறது.

அதன்படி 2023ம் ஆண்டில் உலகளவில் அதிகம் தேடப்பட்ட விளையாட்டு அணிகள் பட்டியலை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியலில் மெஸ்சி தலைமையிலான இன்டர் மியாமி அணி (கால்பந்து ) முதலிடத்தை பிடித்துள்ளது. பிரபல கூடைப்பந்து அணியான லாஸ் ஏஞ்சல்ஸ் லேக்கர்ஸ் 2வது இடத்தை பிடித்துள்ளது.

ரொனால்டோ தலைமையிலான அல்நாசர் அணி (கால்பந்து ) 3வது இடத்தை பிடித்துள்ளது. மேலும் இந்திய கிரிக்கெட் அணி இந்த பட்டியலில் 9வது இடத்தை பிடித்துள்ளது. 

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை