ஹாக்கி

ஜூனியர் உலக கோப்பை ஆக்கி இறுதிப்போட்டி: ஜெர்மனி- அர்ஜென்டினா மோதல்

கோப்பைக்கான இறுதிப்போட்டியில் ஜெர்மனி- அர்ஜென்டினா அணிகள் இன்று மோதுகின்றன.

புவனேஸ்வர்,

12-வது ஜூனியர் உலக கோப்பை ஆக்கி போட்டி (21 வயதுக்கு உட்பட்டோர்) ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் நடந்து வருகிறது. இதில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இறுதிப்போட்டியில் 6 முறை சாம்பியனான ஜெர்மனி, முன்னாள் சாம்பியனான அர்ஜென்டினாவுடன் மல்லுக்கட்டுகிறது.

லீக் ஆட்டத்தில் தோல்வியை சந்திக்காத ஜெர்மனி அணி, கால்இறுதியில் பெனால்டி ஷூட்டில் ஸ்பெயினையும், அரைஇறுதியில் நடப்பு சாம்பியன் இந்தியாவையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. அர்ஜென்டினா லீக் ஆட்டத்தில் ஜெர்மனியிடம் (2-3) பணிந்து இருந்தது. அதற்கு பதிலடி கொடுத்து 2-வது முறையாக கோப்பையை வெல்ல போராடும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.

முன்னதாக மாலை 4.30 மணிக்கு நடைபெறும் 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் இந்திய அணி, பிரான்சுடன் மோதுகிறது. தொடக்க லீக் ஆட்டத்தில் பிரான்சிடம் (4-5) அதிர்ச்சி தோல்வி கண்டு இருந்த இந்திய அணி அதற்கு பழிதீர்க்குமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும்.

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு