பிற விளையாட்டு

பிளேயர்ஸ் சாம்பியன்ஷிப் கோல்ப் தொடர்; இந்தியாவின் அனிர்பன் லஹிரி முன்னிலை!

பிளேயர்ஸ் சாம்பியன்ஷிப் கோல்ப் தொடரில் இந்திய வீரர் அனிர்பன் லஹிரி முன்னிலை பெற்றார்.

தினத்தந்தி

புளோரிடா,

அமெரிக்காவில நடைபெற்று வரும் பிளேயர்ஸ் சாம்பியன்ஷிப் கோல்ப் தொடரில் இந்திய வீரர் அனிர்பன் லஹிரி முன்னிலை பெற்றார். அவர் அமெரிக்காவின் டாம் ஹோக் மற்றும் வரால்ட் வார்னர் ஜோடியை விட குறைவான புள்ளிகள் பெற்றார்.

கோல்ப் விளையாட்டை பொறுத்தவரை குறைவான புள்ளிகள் எடுப்பவரே வெற்றியாளர் ஆவார். புல்வெளி மைதானத்தில் நீண்ட தூரத்தில் இருந்து பந்தை அடிக்கும் போது ஒரே ஷாட்டில் பந்து இலக்குக்குரிய குழியில் விழுந்து விட்டால் குறைவான புள்ளி வழங்கப்படும். பந்தை குழியில் செலுத்துவதற்கு அதிகமான ஷாட் எடுத்துக் கொண்டால் அதிக புள்ளி கிடைக்கும். இதன்அடிப்படையில் புள்ளி முறை கணக்கிடப்படுகிறது.

2 கோடி அமெரிக்க டாலர்கள் பரிசுத்தொகை கொண்ட இந்த தொடரில் இன்னும் நிறைய சுற்று போட்டிகள் நடைபெற உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை