பிற விளையாட்டு

புரோ கபடி லீக்; தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி பெங்கால் வாரியர்ஸ் வெற்றி

தொடக்கம் முதல் பெங்கால் அணி ஆதிக்கம் செலுத்தியது.

மும்பை,

10-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த மாதம் 2-ம் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி.யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் விளையாடுகின்றன.

இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் - பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் பெங்கால் அணி ஆதிக்கம் செலுத்தியது. இதனால் ஆட்ட நேர முடிவில் 46 -26 என்ற கணக்கில் பெங்கால் அணி வெற்றி பெற்றது. 

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு