பிற விளையாட்டு

சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் இறுதி போட்டி; இந்திய வீராங்கனை சிந்து வெற்றி

சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் இறுதி போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து வெற்றி பெற்றுள்ளார்.

தினத்தந்தி

பேசல்,

சுவிஸ் ஓபன் பேட்மிண்டனில் இன்று நடந்த இறுதி போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து மற்றும் தாய்லாந்து நாட்டின் பூசணன் ஓங்பாம்ரங்பான் ஆகியோர் விளையாடினர்.

ஒலிம்பிக்கில் 2 முறை பதக்கம் வென்றவரான சிந்து, முதல் செட்டில் தொடக்கத்தில் 5-7 என்ற புள்ளி கணக்கில் சிந்து பின்தங்கி இருந்தபோதும், பின்பு அதிரடியாக விளையாடி அடுத்தடுத்து புள்ளிகளை வெற்றி கொண்டார். இறுதியில், முதல் செட்டை 21-16 என்ற கணக்கில் சிந்து கைப்பற்றினார்.

இதன்பின் 2வது செட்டையும் அதிரடியாகவே சிந்து தொடங்கினார். ஒரு கட்டத்தில் 5-0 மற்றும் 8-1 என்ற கணக்கில் சிந்து முன்னிலை பெற்றார். பின்பு தொடர்ந்து புள்ளிகளை கைப்பற்றி இறுதியில் 21-8 என்ற செட் கணக்கில் 2வது செட்டையும் தன்வசப்படுத்தினார்.

இதனால், 21-16, 21-8 என்ற நேர் செட் கணக்கில் பூசணனை வீழ்த்தி சிந்து சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். மற்றொரு இறுதி போட்டியில் ஆடவர் பிரிவில் இந்தியாவின் பிரணோய் மற்றும் இந்தோனேசியாவின் ஜோனாதன் கிறிஸ்டி விளையாடி வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து