image courtesy: BNP Paribas Open twitter 
டென்னிஸ்

இண்டியன்வெல்ஸ் டென்னிஸ்: மெட்விடேவ் அரைஇறுதிக்கு முன்னேற்றம்

இண்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.

தினத்தந்தி

இண்டியன்வெல்ஸ்,

இண்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 6-வது இடத்தில் இருக்கும் ரஷிய வீரர் டேனில் மெட்விடேவ் 6-3, 7-5 என்ற நேர்செட்டில் 28-வது இடத்தில் உள்ள டேவிடோவிச் போகினாவை (ஸ்பெயின்) விரட்டியடித்து அரைஇறுதிக்கு முன்னேறினார்.

ஆண்கள் இரட்டையர் பிரிவில் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் ரோகன் போபண்னா (இந்தியா)-மேத்யூ எப்டென் (ஆஸ்திரேலியா) ஜோடி 6-4, 7-5 என்ற நேர்செட்டில் கனடாவின் பெலிக்ஸ் அஜெர் அலியாசிம்-டேனிஸ் ஷபோவாலோவ் இணையை வீழ்த்தி அரைஇறுதிக்கு தகுதி பெற்றது.

இதேபேல் பெண்கள் ஒற்றையர் பிரிவில், அரினா சபலென்கா (பெலாரஸ்), மரியா சக்காரி(கிரீஸ்) ஆகியோர் அரைஇறுதியை எட்டினர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை