பெங்களூரு

கொள்ளை வழக்கில் பெண் உள்பட 2 பேர் கைது

பெங்களூரு பசவேஸ்வராநகர் போலீசார் கொள்ளை வழக்கில் தொடர்புடைய 2 பேரை கைது செய்து ரூ.7½ லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை பறிமுதல் செய்துள்ளனர்.

தினத்தந்தி

பெங்களூரு:

பெங்களூரு பசவேசுவராநகர் போலீசாருக்கு கிடைத்த தகவலின்பேரில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த நபரை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில், அவரது பெயர் சஜ்ஜத் முகமது அலி (வயது 38) என்று தெரிந்தது. இவர், பெங்களூருவில் பெண்கள் தனியாக வியாபாரம் செய்யும் கடைகளை கவனிப்பார். பின்னர் அந்த கடைக்கு வாடிக்கையாளர் போல சென்று அந்த பெண்களின் கழுத்தில் கிடக்கும் தங்கச்சங்கிலிகளை கொள்ளையடித்து வந்தார்.

தான் கொள்ளையடித்து வரும் தங்க சங்கிலியை வியாதியாகி என்ற பெண்ணிடம் அவர் கொடுத்து வந்துள்ளார். அவர் நகைகளை அடகு வைத்து பணத்தை கொடுத்து வந்துள்ளார். இதற்காக சஜ்ஜத்திடம் இருந்து குறிப்பிட்ட பணத்தை வியாதியாகி பெற்று வந்ததும் தெரிந்தது. இதையடுத்து, அந்த பெண்ணும் கைது செய்யப்பட்டார். கைதான 2 பேரும் கொடுத்த தகவலின்பேரில் ரூ.7 லட்சம் மதிப்பிலான 202 கிராம் தங்க நகைகள், 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து