அதிரடியாக சரிந்த தங்கம், வெள்ளி விலை.. மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்

போர் காரணமாக தங்கம் விலை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த இரு நாட்களாக சரிய தொடங்கி உள்ளது.
அதிரடியாக சரிந்த தங்கம், வெள்ளி விலை.. மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்
Published on

சென்னை,

தங்கம் விலை கடந்த 2 நாட்களுக்கு முன்பு வரை வேகமாக உயர்ந்து வந்தது. தாறுமாறாக விலை உயர்ந்ததாலும், ஈரான் அமெரிக்கா போரின் காரணமாக இந்த விலை இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த இரு நாட்களாக தங்கம் விலை சரிய தொடங்கி உள்ளது

சென்னையில் நேற்றுமுன்தினம் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.115 குறைந்து ஒரு கிராம் ரூ.15 ஆயிரத்து 660-க்கு விற்றது. சவரனுக்கு ரூ.920 குறைந்து ரூ.1 லட்சத்து 25 ஆயிரத்து 280-க்கு விற்பனையானது. நேற்று காலை தங்கம் விலை குறைந்திருந்தது. அதன்படி, சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,25,200-க்கும், கிராமுக்கு ரூ.10 குறைந்து, ஒரு கிராம் ரூ.15,650-க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில், நேற்று மாலையில் தங்கம் விலை மேலும் குறைந்தது. அதன்படி, சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,480 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,23,720 -க்கும், கிராமுக்கு ரூ.185 குறைந்து, ஒரு கிராம் ரூ.15,465-க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.315-க்கும், ஒரு கிலோ ரூ.3,15,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தங்கம் விலை

இந்நிலையில் இன்றும் தங்கம் விலை அதிரடியாக சரிந்துள்ளது. இதன்படி சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,120 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,21,600 -க்கும், கிராமுக்கு ரூ.265 குறைந்து, ஒரு கிராம் ரூ.15,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 3 நாட்களில் மட்டும் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.5,600 சரிந்துள்ளது, இல்லத்தரசிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வெள்ளி விலை

வெள்ளிவிலையும் இன்று சரிவை சந்தித்துள்ளது. இதன்படி வெள்ளி கிராமுக்கு ரூ.20 குறைந்து, ஒரு கிராம் ரூ.295-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,95,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:-

04.03.2026 - ஒரு சவரன்- ரூ.1,21,600

03.03.2026 - ஒரு சவரன்- ரூ.1,23,720

02.03.2026 - ஒரு சவரன்- ரூ.1,25,280

01.03.2026 - ஒரு சவரன்- ரூ.1,26,200

28.02.2026 - ஒரு சவரன்- ரூ.1,24,400

27.02.2026 - ஒரு சவரன்- ரூ.1,19,200

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com