தங்கம் விலை உயர்வு.! இன்றைய நிலவரம் என்ன.?

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது.
தங்கம் விலை உயர்வு.! இன்றைய நிலவரம் என்ன.?
Published on

சென்னை,

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப நாள்தோறும் தங்கம் விலையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, தங்கம், வெள்ளி மீது சர்வதேச முதலீட்டாளர்கள் அதிகளவில் முதலீடு செய்து வருகின்றனர். இதனால் இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தவாறு இருக்கிறது.

இதன் தொடர்ச்சியாக சென்னையில், தங்கம் விலை நேற்று அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,440 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,18,880-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.180 உயர்ந்து, ஒரு கிராம் ரூ. 14,860க்கு விற்பனை செய்யப்பட்டது.

Also Read
தங்கம் விலை உயர காரணம் என்ன? - நிர்மலா சீதாராமன் விளக்கம்
தங்கம் விலை உயர்வு.! இன்றைய நிலவரம் என்ன.?

இன்றைய தங்கம் விலை:-

இந்தநிலையில் சென்னையில், தங்கம் விலை இன்றும் உயர்ந்துள்ளது. அதன்படி, ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,19,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து, ஒரு கிராம் ரூ. 14,890க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்றைய வெள்ளி விலை:-

வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது. இதன்படி வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.290-க்கும், ஒரு கிலோ ரூ.2,90,000-க்கும் விற்பனையாகி வருகிறது.

கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:-

24.02.2026 ஒரு சவரன் ரூ.1,19,120 (இன்று)

23.02.2026 ஒரு சவரன் ரூ.1,18,880

21.02.2026 ஒரு சவரன் - ரூ.1,17,440

20.02.2026 ஒரு சவரன் ரூ.1,15,360

19.02.2026 ஒரு சவரன் - ரூ.1,16,000

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com