தொடர்ந்து சரிவை சந்திக்கும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?

சென்னையில் நேற்று ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,20,960-க்கு விற்பனை செய்யப்பட்டது.
தொடர்ந்து சரிவை சந்திக்கும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?
Published on

சென்னை,

தங்கம் விலை கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை வேகமாக உயர்ந்து வந்தது. தாறுமாறாக விலை உயர்ந்ததாலும், ஈரான் அமெரிக்கா போரின் காரணமாக இந்த விலை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை சரிய தொடங்கி உள்ளது.

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.2,120 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,21,600 க்கும், கிராமுக்கு ரூ.265 குறைந்து, ஒரு கிராம் ரூ.15,200-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்றும் தங்கம் விலை குறைந்து காணப்பட்டது. இதன்படி சென்னையில் நேற்று ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,20,960-க்கும், கிராமுக்கு ரூ.80 குறைந்து, ஒரு கிராம் ரூ.15,120-க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளிவிலையை பொறுத்தவரையில் விலை மாற்றமின்றி, ஒரு கிராம் ரூ.295-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,95,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தங்கம் விலை

இந்நிலையில் இன்றும் தங்கம் விலை சரிவை சந்தித்துள்ளது. இதன்படி சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,280 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,19,680-க்கும், கிராமுக்கு ரூ.160 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,960-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 5 நாட்களில் மட்டும் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.7,520 சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி விலை

வெள்ளிவிலையை பொறுத்தவரையில் இன்று சற்று குறைந்துள்ளது. இதன்படி கிராமுக்கு ரூ.5 குறைந்து, ஒரு கிராம் ரூ.290-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,90,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:-

06.03.2026 - ஒரு சவரன்- ரூ.1,19,680 (இன்று)

05.03.2026 - ஒரு சவரன்- ரூ.1,20,960 (நேற்று)

04.03.2026 - ஒரு சவரன்- ரூ.1,21,600

03.03.2026 - ஒரு சவரன்- ரூ.1,23,720

02.03.2026 - ஒரு சவரன்- ரூ.1,25,280

01.03.2026 - ஒரு சவரன்- ரூ.1,26,200

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com