ஏற்ற, இறக்கத்தில் தங்கம் விலை: இன்றைய நிலவரம் என்ன..?

தங்கம் விலை நேற்று ஒரே நாளில் ரூ.2,160 அதிரடியாக உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,16,000-க்கு விற்பனை செய்யப்பட்டது.
ஏற்ற, இறக்கத்தில் தங்கம் விலை: இன்றைய நிலவரம் என்ன..?
Published on

சென்னை,

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப நாள்தோறும் தங்கம் விலையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, தங்கம், வெள்ளி மீது சர்வதேச முதலீட்டாளர்கள் அதிகளவில் முதலீடு செய்து வருகின்றனர். இதனால் இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தவாறு இருக்கிறது. இதன்படி இந்த ஆண்டு தொடக்கம் முதலே தங்கம் மற்றும் வெள்ளி விலை உச்சம் தொட்டு வருகிறது. கடந்த 1-ந்தேதி கிராம் ரூ.14,900, சவரன் ரூ.1,19,200 ஆகவும் விற்பனை ஆனது. அதன் பின்னர், தங்கம் சற்று ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது.

இந்த நிலையில் கடந்த 16-ந்தேதியில் இருந்து தொடர்ந்து 3 நாட்கள் விலை சரிந்து காணப்பட்டது. கடந்த 16-ந்தேதியில் இருந்து 18-ந்தேதி வரையிலான அந்த 3 நாட்களில் மட்டும் கிராமுக்கு ரூ.330-ம், சவரனுக்கு ரூ.2 ஆயிரத்து 640-ம் குறைந்து இருந்தது. இந்த நிலையில் தொடர்ந்து சரிந்து வந்த தங்கம் விலை நேற்று அதிரடியாக உயர்வை சந்தித்தது. அதன்படி, நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 230-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 840-க்கும் விற்பனை ஆனது.

நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.270-ம், சவரனுக்கு ரூ.2 ஆயிரத்து 160-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 500-க்கும். ஒரு சவரன் ரூ.1 லட் சத்து 16 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது. கடந்த சில நாட்களாக வெள்ளி விலை உயர்வில் சற்று தொய்வு இருந்தது. நேற்று கிராமுக்கு ரூ.10-ம், கிலோவுக்கு ரூ.10 ஆயிரமும் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.270-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்றைய தங்கம் விலை

இந்தநிலையில் சென்னையில், தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளது. அதன்படி, ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,15,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,420க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்றைய வெள்ளி விலை

சென்னையில் இன்று வெள்ளி விலையில் மாற்றமின்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி ஒரு கிராம் ரூ.270-க்கும், ஒரு கிலோ ரூ.2,70,000-க்கும் விற்பனையாகி வருகிறது.

கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:-

20.01.2026 - ஒரு சவரன் - ரூ.1,15,360 (இன்று)

19.01.2026 - ஒரு சவரன் - ரூ.1,16,000 (நேற்று)

18.01.2026 - ஒரு சவரன் - ரூ.1,13,840

17.01.2026 - ஒரு சவரன் - ரூ 1,14,560

16.01.2026 - ஒரு சவரன் - ரூ 1,15,520

15.01.2026 - ஒரு சவரன் - ரூ 1,16,480

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com