

சென்னை,
தங்கம் விலை கடந்த 24-ந்தேதி வரை குறைந்து கொண்டே வந்த நிலையில், 25-ந்தேதி விலை ஏற்றம் கண்டு, 26-ந்தேதி குறைந்தது. அதன் பின்னர் மீண்டும் விலை உயர்ந்து வருவதை பார்க்க முடிகிறது.
இந்த நிலையில் நேற்றுமுன் தினம் காலை கிராமுக்கு ரூ.60-ம், சவரனுக்கு ரூ.480-ம் குறைந்து, பிறகு மாலை கிராமுக்கு ரூ.170-ம், சவரனுக்கு ரூ.1,360-ம் உயர்ந்து காணப்பட்டது. மொத்தமாக முந்தைய தின விலையுடன் ஒப்பிடுகையில் கிராமுக்கு ரூ.110-ம், சவரனுக்கு ரூ.880-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 770-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்து 160-க்கும் விற்பனை ஆனது.
நேற்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,09,360-க்கும், கிராமுக்கு ரூ.100 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,670-க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.5-ம், கிலோவுக்கு ரூ.5 ஆயிரமும் குறைந்து, ஒரு கிராம் ரூ.250-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் விற்பனையானது.
இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.3,040 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,12,400-க்கும், கிராமுக்கு ரூ. 380 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,050-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. அதன்படி வெள்ளி விலை கிராமுக்கு ரூ.15-ம், கிலோவுக்கு ரூ.15 ஆயிரமும் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.265-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் விற்பனை ஆகி வருகிறது.
01.04.2026 ஒரு சவரன் - ரூ.1,12,400 (இன்று)
31.03.2026 ஒரு சவரன் - ரூ.1,09,360 (நேற்று)
30.03.2026 ஒரு சவரன் - ரூ.1,10,160
29.03.2026 ஒரு சவரன் - ரூ.1,09,280
28.03.2026 ஒரு சவரன் - ரூ.1,09,280
27.03.2026 ஒரு சவரன் - ரூ.1,07,440