

சென்னை,
தங்கம் விலை ஒரு நாள் ஏறுவதும், மறுநாள் இறங்குவதுமான நிலையில் இருந்து வருகிறது. அந்தவகையில் நேற்று முன்தினம் (08.04.2026) விலை அதிரடியாக உயர்ந்தது. தங்கம் விலையை போல, வெள்ளி விலையும் நேற்று முன்தினம் உயர்ந்து காணப்பட்டது.
நேற்று தங்கம் விலை அதிரடியாக குறைந்தது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,600 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,12,000-க்கும், கிராமுக்கு ரூ.200 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5-ம், கிலோவுக்கு ரூ.5 ஆயிரமும் குறைந்து, ஒரு கிராம் ரூ.260-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,000 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,13,000-க்கும், கிராமுக்கு ரூ.125 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,125-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. இதன்படி வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5-ம், கிலோவுக்கு ரூ.5 ஆயிரமும் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.265-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
10.04.2026 ஒரு சவரன் - ரூ.1,13,000 (இன்று)
09.04.2026 ஒரு சவரன் - ரூ.1,12,000 (நேற்று)
08.04.2026 ஒரு சவரன் - ரூ.1,13,600
07.04.2026 ஒரு சவரன் - ரூ.1,10,880
06.04.2026 ஒரு சவரன் - ரூ.1,11,920
05.04.2026 ஒரு சவரன் - ரூ.1,11,600