சற்று குறைந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?

வெள்ளி விலையில் மாற்றமின்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது.
சற்று குறைந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?
Published on

சென்னை,

தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் நீடித்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக விலை ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. அதன்படி நேற்றும் தங்கம் விலை உயர்ந்து இருந்தது. நேற்று முன்தினம் கிராமுக்கு ரூ.100-ம், சவரனுக்கு ரூ.800-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 320-க்கும். ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்து 560-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

நேற்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 320 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,14,880-க்கும், கிராமுக்கு ரூ.40 உயர்ந்து, ஒரு கிராம் ரூ. 14,360-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.275-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 75 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.

தங்கம் விலை

இந்த நிலையில், சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று (17.04.2026 - வெள்ளிக்கிழமை) சற்று குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,200 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,13,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் கிராமுக்கு ரூ.150 குறைந்து, ஒரு கிராம் ரூ. 14,210-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலையில் மாற்றமின்றி நேற்றைய விலையிலேயே அதாவது, ஒரு கிராம் ரூ.275-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 75 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:-

17.04.2026 - ஒரு சவரன் - ரூ.1,13,680 (இன்று)

16.04.2026 - ஒரு சவரன் - ரூ.1,14,880 (நேற்று)

15.04.2026 - ஒரு சவரன் - ரூ.1,14,560

14.04.2026 - ஒரு சவரன் - ரூ.1,13,760

13.04.2026 - ஒரு சவரன் - ரூ.1,12,480

12.04.2026 - ஒரு சவரன் - ரூ.1,12,800

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com