

சென்னை,
தங்கம் விலையில் ஏற்றம்-இறக்கம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. கடந்த 4-ந்தேதி விலையில் மாற்றம் இல்லாமல் இருந்தது. நேற்று முன்தினம் கிராமுக்கு ரூ.180-ம், சவரனுக்கு ரூ.1,440-ம் குறைந்து காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று ஒரே நாளில் 2 முறை விலை ஏற்றம் கண்டது.
அதன்படி, நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 820-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்து 560-க்கும் விற்கப்பட்டது. நேற்று காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.230-ம், சவரனுக்கு ரூ.1,840-ம் உயர்ந்தது. பின்னர் மாலை கூடுதலாக கிராமுக்கு ரூ.50-ம், சவரனுக்கு ரூ.400-ம் அதிகரித்தது.
இப்படியாக நேற்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.280-ம், சவரனுக்கு ரூ.2,240-ம் உயர்ந்து. ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 100-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 800-க்கும் விற்பனை ஆனது. வெள்ளி விலையை பொறுத்தவரையில், நேற்று கிராமுக்கு ரூ.10-ம், கிலோவுக்கு ரூ.10 ஆயிரமும் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.275-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 75 ஆயிரத்துக்கும் விற்கப்பட்டது.
இந்த நிலையில், சென்னையில் தங்கம் விலை இன்று மேலும் அதிகரித்துள்ளது. அதன்படி, தங்கம் கிராமுக்கு ரூ.50-ம், சவரனுக்கு ரூ.400-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ. 14,150-க்கும், ஒரு சவரன் ரூ.1,13,200-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலையை பொறுத்தவரையில் விலைமாற்றமின்றி நேற்றைய விலையிலே விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.275-க்கும், ஒரு கிலோ ரூ.2,75,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
07.05.2026 ஒரு சவரன் ரூ.1,13,200 (இன்று)
06.05.2026 ஒரு சவரன் ரூ.1,12,800 (நேற்று)
05.05.2026 ஒரு சவரன் ரூ.1,10,560
04.05.2026 ஒரு சவரன் ரூ.1,12,000
03.05.2026 ஒரு சவரன் ரூ.1,12,000
02.05.2026 ஒரு சவரன் ரூ.1,12,000