அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை... இன்றைய நிலவரம் என்ன.?

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.250-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை... இன்றைய நிலவரம் என்ன.?
Published on

சென்னை,

தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.400 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,05,600-க்கும், ஒரு கிராம் ரூ.13,200-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

நேற்று காலை நிலவரம்

நேற்று காலை தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,280-ம், கிராமுக்கு ரூ.160-ம் அதிரடியாக உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,06,880-க்கும் ஒரு கிராம் ரூ.13,360-க்கும் விற்பனையானது. இதனையடுத்து நேற்று ஒரே நாளில் தங்கம் விலை 2-வது முறையாக ஏற்றம் கண்டது.

நேற்று மாலை நிலவரம்

அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் நேற்று மாலையில் சவரனுக்கு ரூ.960 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,07,840-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.120 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,480-க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,240 அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்றைய தங்கம் விலை

இந்த நிலையில், இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,160 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,10,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.270 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,750-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்த நிலையில் ஒரு கிராம் ரூ.250-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com