கொல்கத்தா: சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் போலீஸ் துணை கமிஷனர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

மேற்குவங்க மாநிலத்தில் அமலாக்கத்துறை விசாரணையின் முடிவில் தொழிலதிபர் ஜாய் காம்தார் சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.
கொல்கத்தா: சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் போலீஸ் துணை கமிஷனர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
Published on

கொல்கத்தா,

மேற்குவங்க மாநிலத்தில் சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை நேற்று கொல்கத்தா போலீஸ் துணை கமிஷனர் ஷாந்தனு சின்ஹா பிஸ்வாஸ் மற்றும் தொழிலதிபர் ஜாய் காம்தார் ஆகியோரின் வீடுகள் மற்றும் தொடர்புடைய இடங்களில் அதிரடி சோதனை நடத்தியது.

அதில் பிஸ்வாஸ் வசிக்கும் பாலிகஞ்ச் பகுதியில் உள்ள அவரது வீடு உள்ளிட்ட 2 இடங்களிலும், 'சன் என்டர்பிரைசஸ்' நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநரான ஜாய் காம்தாரின் இடங்களிலும் அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். கடந்த 1-ம் தேதி சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் சிலரது வீடுகளில் ரூ.2 கோடி தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள், பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்றதாக தெரிகிறது.

அமலாக்கத்துறையினரின் விசாரணையின் முடிவில் தொழிலதிபர் ஜாய் காம்தாரை சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். அவரை கோர்ட்டு அனுமதியுடன் காவலில் எடுத்து விசாரிக்கும் நடவடிக்கையில் அமலாக்கத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். கொல்கத்தா போலீஸ் துணை கமிஷனர் பிஸ்வஜித் போத்தார் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகமால் தலைமறைவானதாக தெரிகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com