தீண்டாமையை ஒழிக்க வாழ்நாள் முழுவதும் போராடியவர் தியாகி இமானுவேல் சேகரன்: அன்புமணி ராமதாஸ்

சமூக விடுதலைக்காகவும், தீண்டாமைக்கு எதிராகவும் தியாகி இமானுவேல் சேகரன் நடத்திய போராட்டங்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இமானுவேல் சேகரன் 103-வது பிறந்தநாள்; அன்புமணி ராமதாஸ் புகழாரம்
Published on: 

சென்னை,

தியாகி இம்மானுவேல் சேகரனாரின் பிறந்த நாளில் அவரது இன விடுதலை உணர்வை போற்றுவோம் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:

இமானுவேல் சேகரன் 103-வது பிறந்தநாள்; அன்புமணி ராமதாஸ் புகழாரம்

தீண்டாமையை ஒழிக்க வேண்டும், சமூகங்களுக்குள் இணக்கம் வேண்டும் என்பதற்காக தமது வாழ்நாள் முழுவதும் போராடிய தியாகி இமானுவேல் சேகரனாரின் 103-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் அவரை வணங்குகிறேன். சமூக விடுதலைக்காகவும், தீண்டாமைக்கு எதிராகவும் அவர் நடத்திய போராட்டங்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை.

இந்த நாளில் அவரது விடுதலை உணர்வையும், தியாகத்தையும் நாம் அனைவரும் போற்ற வேண்டும். அதுமட்டுமின்றி, அவர் எந்த இலக்கை அடைய பாடுபட்டாரோ, அந்த இலக்கை அடைவதற்காக உழைக்க அனைவரும் உறுதியேற்றுக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com